Tuesday, October 19, 2010

மனித உரிமையின் வளர்ச்சி -2

4 comments
மனித உரிமைகள் பற்றிய வரலாற்று ரீதியான போக்கை இந்த பதிவில் பர்த்துவருகின்றோம். அந்த வகையில் கடந்த பதிவில் மனித உரிமைகளின் ஆரம்பநிலை  ஆகிய மக்னா காட்டா உடன்படிக்கை பற்றி பார்த்தோம். மக்னா காட்டா அமுலாக்கப்பட்ட 1215 - 1689 வரை மனித உரிமைகளை பாதுகாத்து சிறந்த ஒரு நிர்வாகம் நடைபெற்றது என்று கூறமுடியாது. ஏனேனில் இக் காலப்பகுதிலேயே 14 ம் ஹென்றி மன்னன் பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து கொன்று குவித்தான். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் இக் காலப்பகுதியில் நடைபெற்றது. இந்தவகையில் 1611 இல் நீதவான் குக்...

Saturday, October 16, 2010

தெய்வீகக்கோட்பாடு ........மக்கியவல்லியும் மனித உரிமை வளர்ச்சியும்

0 comments
அரசின் தோற்றம்  பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அதில் தெய்வீகக்கோட்பாடு   என்பது மிகவும் முக்கியமானதும் பழமையானதும் கூட.இன்று இக் கோட்பாடு கேலிக்குரியதாக இருப்பினும், இன்றும் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இக் கோட்பாட்டின் செல்வாக்கை காணக்கூடியதாக உள்ளது. இக் கோட்பாட்டின் படி அரசு என்பது இறைவனின் படைப்பு என்றும், அவ் அரசில் மேற்கொள்ளபடும் ஆட்சி இறைவனால் மேற்கொள்ளபடுகின்றது என்றும், ஆட்சியாளர்கள் இறைவனின் பிரதிநிதி என்றும், அவர்கள் இறைவனிடமிருந்து அதிகாரத்தை...

இதுவும் ஆயுத பூஜை தான் .....

28 comments
இன்று ஒவ்வொரு தனி மனித உழைப்புக்கும் காரணமான வயிற்றுப்பிழைப்பு நாள் . அது தான் ஐ நாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவு தினம் இன்று .  ஆனால் எம் கண்களுக்கு தெரிவது நாம் முக்கியத்துவம் கொடுப்பது எந்தவித பயனுமற்ற ஒரு விழா ஆயுத பூஜை . இதுவும் ஆயுத பூஜை தான் .ஆனால் சாவிக்கொத்துகளை அடுக்கி மிதமிஞ்சிய உணவினால் நடைபெறும் பூஜை அல்ல .. உணவு இல்லாததால் ஆயுதத்தின் மூலம் உணவு தேவையை பூர்த்தி செய்யும் முறை . இது வேறு எங்குமில்ல ..நம் ஆசியா , இந்தியாவில் தான் . Mirgitand எனும் இந்திய கிராமத்தில்...

Thursday, October 14, 2010

மனித உரிமையின் வளர்ச்சி -சாதி - பிராமணர்கள் - கடவுள் 1

0 comments
ஆதி காலத்தில்லிருந்தே  சமூக நீதி தொடர்பான எதிர்பார்ப்பு மனிதர்களிடையே இருந்துவந்துள்ளது. மனிதனை ஒரு ஒழுங்கு நெறிக்குள் கொண்டு வர வேண்டும் என்று சம்பிரதாயங்களை உருவாக்கிய அறிஞர்கள், சாதி பாகுபாட்டை கொண்டுவந்தமையால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது.  இதனால் உயர்தோர் தாழ்ந்தோரை அடக்கியாளும் நிலை ஏற்பட்டது.  இச் சாதிப் பாகுபாடனது கடவுள் அருளினால் நிகழும் செயல் ஆகையால் இறைவனின் தீர்மானத்திற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதில் மதவாதிகள் வெற்றி கண்டனர். இந்து மதத்தின் தோற்றத்தை...

Wednesday, October 6, 2010

அரசின் தோற்றமும் மனித உரிமையின் வரலாறும்..

7 comments
அரசு தோன்றுவதற்கு முன் எவ்வாறு மனித சமுதாயம் இருந்தது என்பதை கடந்த பதிவில் பார்த்தோம் உயிர்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் எதுவுமில்லாமை என்பது பிரதான பிரச்சனையாக அக் காலத்தில் காணப்பட்டது. இதனால் மனிதர்களும் விலங்குகளும் அச்சத்துடனே வாழ  வேண்டிய  சூழ்நிலை இருந்தது .கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் , அச்சமற்றவர்களாகவும் இருந்தபோதிலும் , எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துகொள்ளக்கூடிய தன்மை அத் தலைமைத்துவத்துக்கு இருக்கவில்லை. உயிர் மட்டும்மல்லாது தம்முடைய...

Sunday, August 22, 2010

இலங்கையும், உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறையும்

0 comments
இன்றைய உலகில் வாழ்கின்ற அனைவரிடமே ஏனையவர்களிடத்தே   கூறமுடியாத அல்லது கூறவிரும்பாத பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றது . ஏன் நீங்கள் கூட  அவ்வாறான  பல விடயங்களை உங்கள் மனதில் போட்டு புதைத்துள்ளிர்கள் தானே? அவ்வாறான ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் விடயங்களை வெளியே கொண்டுவருவதற்காக சிக்மன் ப்றோயிட் என்ற உளவியரலால் முன்வைக்கப்பட்டதே  உளப்பகுப்பாய்வு கொள்கை ஆகும். உளப்பகுப்பாய்வு என்பது மனிதனின் ஆழ்மனதிலே பதியப்பட்ட விடயங்கள் மனித நடைத்தையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை...

Tuesday, August 17, 2010

மனித உரிமைகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி

0 comments
மனித  உரிமைகள் என்ற எண்ணக்கரு நவீன உலகத்தில் தீடிரென தோன்றியது அல்ல . மனித வரலாற்றில் அது படிப்படியாக தோன்றி நியாயத்தை குறிக்கோளாகக் கொண்டு நாகரிகமடைந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மனித உரிமைகள் பற்றிய அமைப்புகளால் மேற்கொள்ளபட்ட  பாரிய முயற்சியாக இது காணப்படுகிறது .  மனித சமுதாயத்தின் ஆரம்பமும் , மனித உரிமைகள் தொடர்பாக வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நிலவிய நிலைப்பாடும் . வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது எழுத்திலோ அல்லது தொல்பொருள்சான்றுகள் மூலமோ  உறுதிபடுத்த...

Monday, August 16, 2010

ஓர் அறிமுகம் ......

0 comments
அறிமுகம் ...... மனிதம் ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது . மனிதநேயத்தின் ஒரு பணியாக ஒவ்வொருவரிடமும் மனிதம் மற்றும் அதன் சட்டங்கள்  சரியான முறையில் அனைவரையும் சென்றடைய எடுக்கும் முதல் முயற்ச்சியாக இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அனைவரும் அடிப்படை உரிமைகள் அடிப்படை சட்டங்கள், உலகை, சூழலை  பாது காக்க வேண்டிய கட்டாயத்தன்மை பற்றி அறிந்திருத்தல் வேண்டும் . சிறு மாற்றமே பெரியதொரு மாற்றத்தை கொண்டு வரும்.   இதற்க்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. நம்மில் நம் பூமியில்  நாம்...