Saturday, October 16, 2010

தெய்வீகக்கோட்பாடு ........மக்கியவல்லியும் மனித உரிமை வளர்ச்சியும்

0 comments
அரசின் தோற்றம்  பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அதில் தெய்வீகக்கோட்பாடு   என்பது மிகவும் முக்கியமானதும் பழமையானதும் கூட.இன்று இக் கோட்பாடு கேலிக்குரியதாக இருப்பினும், இன்றும் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இக் கோட்பாட்டின் செல்வாக்கை காணக்கூடியதாக உள்ளது.


இக் கோட்பாட்டின் படி அரசு என்பது இறைவனின் படைப்பு என்றும், அவ் அரசில் மேற்கொள்ளபடும் ஆட்சி இறைவனால் மேற்கொள்ளபடுகின்றது என்றும், ஆட்சியாளர்கள் இறைவனின் பிரதிநிதி என்றும், அவர்கள் இறைவனிடமிருந்து அதிகாரத்தை பெற்று ஆட்சி செய்கின்றார்கள் என்றும், அவ் ஆட்சிக்கு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும், கட்டுப்பட மறுப்பது என்பது இறைவனுக்கு எதிராக  செய்யப்படும் யுத்தத்திற்கு ஒப்பானது என்றும், இக் கோட்பாடு வலியுறுத்துகிறது.மத நம்பிக்கைகள் வேரூன்றி காணப்படும் அக் காலத்தில் இக் கோட்பாடு மிகுந்த வரவேற்பை பெற்றது.



இக் கோட்பாட்டின் எழுர்ச்சிக்கு கிறிஸ்தவ மதத்தின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது.ரோமானிய காலத்தில் எழுச்சி பெற்ற கத்தோலிக்க திருச்சபையும், பாப்பரசர் என்ற மதத் தலைமைத்துவமும் இக் கோட்பாட்டை பெரிதும் வலியுரித்தியது. இதன் காரணமாக பாப்பரசர்கள் அரசிய அதிகாரத்தில் மிகுந்த செல்வாக்கை பெற்றனர்.


பாப்பரசர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக அதிகாரத்தை பெறுகின்றார்கள் என்றும், அவர்களிடமிருந்தே மன்னர்கள் அதிகாரத்தை  பெறுகின்றமையால் மன்னர்களை விட பாப்பரசர்களும் திருச்சபையுமே அதிகாரம் கூடியது என்ற வகையில் பிற்காலத்தில்  மன்னர்களுக்கும் திருச்சபைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது.

இறைவனிடமிருந்தே அதிகாரம் பெறப்படுகின்றது என்று மக்கள் நம்பியமையால், ஆட்சியாளர்கள் இக் கோட்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் "மன்னனின் கட்டளைகளை மக்கள் இறைவனின் கட்டளைகளாக ஏற்று நடக்க வேண்டும் என்றும், அவ் ஆட்சி சர்வதிகாரமாக இருந்தாலும் மக்கள் கட்டுப்படவேண்டும்".இவ்வாறாக ஆட்சியாளர்கள் இதனை பயன் படுத்தி சர்வதிகாரமாக நடந்து கொண்டனர். 

நம்பிக்கையின் அடிப்படையில் அரசு மற்றும் அதன் தோற்றம் பற்றி விளக்கும் இக் கோட்பாடு காலவோட்டத்தில் தனது செல்வாக்கை இழக்க தொடங்கியது. அரசு என்பது மத சார்பற்ற நிறுவனம் என்றும்  அரசியலில் மதத்தின் தலையிட்டை கண்டிக்கும் "மக்கியவல்லியின்" சிந்தனை வலுப்பெற தொடங்கியதில் லிருந்து இதன் முக்கியத்துவம் குறையத்தொடங்கியது.

இன்றும் கூட மத்தத்தின் செல்வாக்கை சில நாடுகளை காணக்கூடியதாக உள்ளது. இலங்கை அரசியல் யாப்பிலேயே பௌத்த மதம் அரச மதம் என்றும், அதனை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவருடைய  கடமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏனைய மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை காணலாம். அடுத்து இந்தியா மத சார்பற்ற நாடு என்று குறிப்பிட்ட போதிலும் அங்கு இந்து மதத்திற்கே முக்கியத்துவம்  வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்  இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாம் மதத்திற்கே முக்கியத்துவம் வழங்க படுகின்றது.

இன்று அனேக நாடுகளில் நடைபெறும் யுத்தங்கள் கூட மதத்தை அடிப்படையாக கொண்டே நடைபெறுகின்றது.எது எப்படியோ அரசு என்பது மத சார்பற்றதாக  இருக்கும்  போதே அங்கு ஆட்சியானது சிறப்பாக நடைபெறும்.

0 comments:

Post a Comment