இன்று ஒவ்வொரு தனி மனித உழைப்புக்கும் காரணமான வயிற்றுப்பிழைப்பு நாள் . அது தான் ஐ நாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவு தினம் இன்று . ஆனால் எம் கண்களுக்கு தெரிவது நாம் முக்கியத்துவம் கொடுப்பது எந்தவித பயனுமற்ற ஒரு விழா ஆயுத பூஜை .
இதுவும் ஆயுத பூஜை தான் .ஆனால் சாவிக்கொத்துகளை அடுக்கி மிதமிஞ்சிய உணவினால் நடைபெறும் பூஜை அல்ல .. உணவு இல்லாததால் ஆயுதத்தின் மூலம் உணவு தேவையை பூர்த்தி செய்யும் முறை . இது வேறு எங்குமில்ல ..நம் ஆசியா , இந்தியாவில் தான் .
Mirgitand எனும் இந்திய கிராமத்தில் பசியை போக்குவதற்காக இரும்பு ஆயுதத்தால் வயிற்றில் சூடு வைக்கும் முறை . இன்னமும் தொடர்கிறது ........
இந்தியாவில் மட்டும் மொத்தமாக இரண்டு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் இறக்கின்றனர் . ஒரு நாளைக்கு 6 ,000 சிறுவர்கள் வீதம் .
அதுவும் இந்தியாவில் மட்டும் 43 வீதமான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் . சீனாவில் வெறும் ஏழு சதவீதமே .... உலகத்தில் முதலாவது இடத்தில் இந்தியா...
கார்டியன் பத்திரிக்கை ஆசிரியர் குழாம் சென்ற போது அவர்களுக்கு கிராமத்தவர்கள் கூறியது "இவ்வாறு வயிறு பெருத்து வந்தால் வாழை இலை வைத்து சூடு போடுவோம் , வழியால் கத்தினால் கிருமிகள் இறக்கின்றன என்று அர்த்தம் " ஆனால் இந்த முறைகள் கிருமி தொற்று ஏற்ப்பட்டு அந்த கிராமத்தில் பல சிறுவர்கள் இறந்துவிட்டனர் .
ஆசியா மிகப்பெரும் சவாலை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரும் . காரணம் அறிவின்மை ,விழிப்புணர்வு இன்மை ,அரசின் திட்டமில்லாத நடவடிக்கை போன்றன .
அண்மையில் கூட இந்தியாவில் 67 ,௦௦௦ தொன் தானியங்கள் பழுதடைந்தன . இதனால் மாதத்திற்கு 190 ,௦௦௦ பேருக்கு உணவு வழங்கலாம் என உயர்நீதிமன்றத்தால் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது .
பட்டினியால் 13 .5 மில்லியன் சிறுவர்களும் கல்வியை இழக்க வேண்டி நேர்ந்துள்ளது . சிறுவர் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துவதை எதிர்ப்பதை விட அவர்கள் உருவாகும் இடத்தை தடுப்பது எவளவோ மேலானது .
நாம் சற்று சிந்திக்கவும் வெட்கம் கொள்ளவும் வேண்டிய நிலை ................. இல்லாவிட்டால் மேலே உள்ள ஆயுதத்திற்கான ஆயுத பூஜை பதிவு போலவும் எடுத்துக்கொள்ளலாம் ....
படங்கள்,தகவல்,புள்ளி விபரம் நன்றி - இணையம்
மறக்காமல் வாக்களியுங்கள் .. அனைவரையும் சென்றடைய ...
US Health Funding Freeze Harms Low-Income Households
-
Click to expand Image Protestors gather outside the U.S. Supreme Court as
oral arguments are delivered in the case of Medina v. Planned Parenthood
South At...
13 hours ago
சரியான நேரத்தில் சரியான பதிவு... ஆனால், இந்த உண்மைகளை எல்லாம்... மதம்... என்ற மதம் மறைத்துவிடும்.
http://valaakam.blogspot.com/2010/06/blog-post_22.html
shocking news.
oh இப்படியான நிகழ்வுகள் ??????????????????????????திருத்தப்பட வேண்டும்
www.kavinthan.blogspot.com
முதன் முறையாக கேள்விப்படுகிறேன் (பட்டினியை பற்றியல்ல, அதை கையாள்வதற்கு இவ்வளவு கொடுமையான முறையை பின்பற்றுவதை)..! :-(
இதை உணர்ந்து நம்மாலான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக முக்கியம். உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இந்த பதிவை நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே, 'பட்டினிச் சாவினை' தடுப்பதற்கு Bhookh Relief Foundation என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது, நாம் செய்ய வேண்டியதெல்லாம், அதன் வலைத்தளத்திற்கு சென்று (www.bhookh.com), சொடுக்கவேண்டியது தான்,
நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்,
ஒரு சொடுக்கு மூலம் ஒரு கோப்பை உணவு, ஐக்கிய நாடுகள் சபை மூலம் வழங்கப்படும்.
அருமையான பதிவு...ஆனால் கொடுமையான நிகழ்வு....மனம் கொதிக்கிறது
”ஆயதத்தின் மூலம் சூடு”அதிர்ச்சி.பகிர்வுக்கு நன்றி சுதர்சன்.
என்னடா இது, அறிவியல்ன்றானுங்க, ஆராய்ச்சின்றானுங்க, சந்திரனுக்கு ஆள் அனுப்பறேன்,செவ்வாய்க்கு குடி போகப் போறேன் இப்படியெல்லாம் உதார் உடுரானுங்க, இத்தனை பேர் பட்டினியால் சாகறதுக்கு இவனுங்களாள ஒன்னும் புடுங்க முடியலையா? காக்கா குரிவிங்க கூட பிரச்சினையில்லாம எதையாவது சாப்பிட்டு விட்டு வாழ்ந்திட்டுப் போகுது, இவ்வளவு செய்யுற மனிதா அதுங்களுக்கு இருக்கும் காமன் சென்ஸ் கூட உனக்கு இல்லையா? வெட்கக் கேடு.
அம்மாடியோ பசிக்காக சூடா. மகா கொடுமையாவுல்ல இருக்கு
நல்ல விழிப்புணர்வு பதிவு. உண்மைகள் உறங்கக்கூடாது என்ற நோக்கில் எழுதப்பட்ட பதிவு..
கொடுமையான தகவல் பகிர்வுக்கு நன்றி !
இது தெரியாமல் போச்சே எனக்கு. நன்றி தகவலுக்கு. அதுசரி இந்தியா வல்லரசாச்சே.அங்க இப்படியுமா ?? இல்ல சும்மா கேட்டன் நாம இன்னும் எங்கெங்கோ கஸ்டப்படுறம் இல்லையா.
@ நன்றி வளாகம் .. மதங்கள் எப்போதும் உண்மைகளை மறைக்கின்றன ...
@ ஜெரி ஈசானந்தன்.
அதிர்ச்சியான தகவல் தான் ...நம் ஊடங்கங்கள் தவறவிடுவதை வெளிநாட்டு ஊடகங்கள் விட்டுவைப்பதில்லை ...
@ kavinthan , paul
மிக்க நன்றிகள் .. :)
@
மார்கண்டேயன் ...
நிச்சயம் பார்க்கிறேன்...
@RK guru
@கே.ரவிஷங்கர்
நன்றிகள்...
ஆம் .. மித மிஞ்சிய உணவு விழாக்களில் அடிப்படை உணவு கூட இல்லாமல் அவர்கள் ......
@ jeyadeva..
ஹஹா ... அறிவியல் எல்லாம் மேலைத்தேயத்தொடு .... சுஜாதா கவிதை நினைவு வருகிறது " அறிவியல் ஆய்வுகூடம் வெளியே தொங்கும் திருஷ்டி பூசணி "
அன்புடன் மலிக்கா :
ஊக்கத்திற்கு நன்றிகள் .... உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை .. ஊடகங்கள் உறங்குகின்றன ...
குத்தாலத்தான் :
கொடுமையான தகவல் பகிர்வுக்கு நன்றி
நன்றிகள் ...
//றமேஸ்-Ramesh :
இது தெரியாமல் போச்சே எனக்கு. நன்றி தகவலுக்கு. அதுசரி இந்தியா வல்லரசாச்சே.அங்க இப்படியுமா ?? இல்ல சும்மா கேட்டன் நாம இன்னும் எங்கெங்கோ கஸ்டப்படுறம் இல்லையா//
நன்றி ரமேஸ் ... மிக எளிது ...பணம் உள்ளவனுக்கு மட்டும் தான் வல்லரசு :D
ஐயோ கொடுமைங்க...மனம் பதைக்கிறது...வறுமை கொடியது.....அதைவிட கொடியது அரசாங்கத்தின் அலட்சியம்
ெெகாடுமையிலும் கொடுமை------- மனம் பதறுகிறது,
மிகவும் நெருடலாய் இருக்கிறது... ஒரு பக்கம் கோடி கோடியாய் படமெடுத்து அழிக்கும் ஒரு கூட்டம்.. மறுபுறம் கோடிக்குள் (கொல்லைப்புறம்) புறளும் ஒரு கூட்டம்... இப்படியொரு கேவலம்...
வெட்கம் கொள்ள வேண்டிய நிலை ...
தக்க சமையத்தில் அருமையான பதிவு
அருமையான பகிர்வு ஆனால் நெருடலாக உள்ளது இதை பார்க்கும்பொழுது ..
இந்தியாவிலேயே இவ்வாறான மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்படுகிறது.
இந்தியா வல்லரசு ஆவதற்கு முதல் இவ்வாறான மூடநம்பிக்கைளை ஒழித்தால் நன்றாய் இருக்கும்.
இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://dilleepworld.blogspot.com/2010/10/blog-post_17.html
Thanks dear buddy!
Welcome to : amazingonly.com
by
TS
//பட்டினியை பற்றியல்ல, அதை கையாள்வதற்கு இவ்வளவு கொடுமையான முறையை பின்பற்றுவதை// thanks for sharing.
Migavum Vedhanaiyana vizhayam.
Nanrigal pala.
Ivan
Nemichandran
நாம வல்லரசு ,...அது ....இது .... என்று உதார் விடும்போது
வெள்ளையன் ஏற்க்கனவே எதையோ தோய்த்து வைத்திருந்த செருப்பாலே நம் வாயிலேயே அடிப்பது