அரசு தோன்றுவதற்கு முன் எவ்வாறு மனித சமுதாயம் இருந்தது என்பதை கடந்த பதிவில் பார்த்தோம்
உயிர்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் எதுவுமில்லாமை என்பது பிரதான பிரச்சனையாக அக் காலத்தில் காணப்பட்டது. இதனால் மனிதர்களும் விலங்குகளும் அச்சத்துடனே வாழ வேண்டிய சூழ்நிலை இருந்தது .கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் , அச்சமற்றவர்களாகவும் இருந்தபோதிலும் , எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துகொள்ளக்கூடிய தன்மை அத் தலைமைத்துவத்துக்கு இருக்கவில்லை.
உயிர் மட்டும்மல்லாது தம்முடைய ஆதனத்தை பிறர் தலையீடு இன்றி அனுபவிக்க கூடிய சூழ்நிலையும் அக் காலத்தில் காணப்படவில்லை. ஏனேனில் பலம் வாய்ந்தவர்கள் தமது சொத்துக்களை கைப்பற்றக்கூடிய நிலைமை இருந்தமையால், சொத்துக்கள் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை காணப்பட்டது.
தாம் விரும்பிய வாழ்கையை வாழ்வதற்கு சுகந்திரம் இருக்கவில்லை. ஏனேனில் தமது தலைவனின் சர்வதிகார ஆட்சிக்கு அடிபணிந்து வாழவேன்டியமையால் சுகந்திரம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
இவ்வாறு அடிமைத்தனம் மட்டுமல்லாமல் கொடூரமான சித்திரவதைக்கும் ஆளாகவேண்டிய நிலமையும் காணப்பட்டது. மேலும் நியாயமான வழக்கு விசாரணையில் தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கக்கூடிய நிலை இருக்கவில்லை.மேலும் ஒரு மனிதன் என்றவகையில் தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை பாதுகாத்து கொள்வதற்கும் வழிகள் இருக்கவில்லை.
இவற்றை நோக்கும் போது மனித சமுதாயத்துக்கும் மிருகங்களுக்கும் இடையே பெரிதாக வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை.இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே அரசு என்ற அமைப்பு தோன்றுவதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டது.
அரசின் தோற்றம் பற்றிய கருத்துக்கள்
'தோமஸ் ஹோப்ஸ்' கருத்துப்படி அரசனுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையின் மூலமாக அரசனுக்கு மக்களை ஆட்சி செய்வதற்கு அவசியமான அதிகாரம் கிடைத்த போதிலும் அது பற்றி கேள்வி எழுப்ப மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. ஆனால் ஜான் லோகினுடைய கருத்துப்படி அரசன் மக்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டு இருந்தான்.அரசின் தோற்றம் பற்றிய இவர்களுடைய கருத்துகள் என்பது முக்கியமாக காணப்படுகின்றது.
அரசின் தோற்றம் பற்றிய தர்க்க ரீதியான கருத்துக்களை முன் வைத்தவர்கள், சமுகத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் மூலமே அரசு தோற்றம் பெற்றது என்கின்றனர். இதுவே ஏற்றுகொள்ள பட்ட கருத்தும்.
அரசை உருவாக்கிய பின்னரும் மனித சமுதாயத்தில் எதிர்பார்த்த சுமுகநிலை ஏற்பட்டது என கூறமுடியாது.சிறந்த ஒருவன் அரசனாக நியமிக்கப்பட்ட போது, சிறந்த நிர்வாகம் கிடைத்த போதிலும்,சர்வதிகரன் ஒருவன் அரசனாக நியமிக்கப்படும் விடத்து அனைத்தும் மாற்றமடைந்தது. வாய் மூலம் பிறப்பிக்கும் கட்டளைகள் அமுலக்கபட்டது. அச் சட்டத்தின் நன்மை தீமை பற்றி சிந்திக்க மக்களுக்கு வாய்பளிக்கவில்லை.இந்தவகையில் அரசாட்சி என்பது அரசனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே நடை பெற்றது.இதிலிருந்து விடுபட மக்களுக்கு வழி இருக்கவில்லை.
அரச அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் சொத்துக்களை அழித்தல்,அல்லது சொத்துக்களை அபகரித்தல்,நியாயமான காரணமின்றி கைது செய்தல், அல்லது சித்தரவதை செய்தல்,நியாயமான வழக்கு விசாரணை நடத்தாமை,சுகந்திரமாக தமது வாதத்தை எடுத்துரைக்க அனுமதிக்காமை, தனியாள் சுகந்திரம் மதிக்க படாமை போன்ற பல்வேறு காரணிகள் மனித உரிமையை இனம் காண மனிதனை தூண்டிய வரலாற்று ரீதியான காரணிகள் ஆகும்.ஏன் இன்றும் கூட மேற்கூறிய நிலைமைகளை காணக்கூடியதாக உள்ளது.
US Health Funding Freeze Harms Low-Income Households
-
Click to expand Image Protestors gather outside the U.S. Supreme Court as
oral arguments are delivered in the case of Medina v. Planned Parenthood
South At...
20 hours ago
வாழ்த்துகள்...தொடரட்டும்...!!!
welldone... write more :)
சுப்பரா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்...
எவனாவது ஒரு அரசியல்வாதியோ... அல்லது தொண்டனோ... ( எதிர் கால அரசியல்வாதி ஆகக்கூடியவர்களோ... ) இதைப்படிக்கும் போது... தாங்களேன் பதவி ஏற்றப்பட்டோம் என்ற அடிப்படை விளங்கும்.
சமுதாயத்துக்கு தேவையான அம்சம்... வாழ்த்துக்கள். :)
Thankyou friends for your encouragement
தரமான பதிவு. உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிக்க வருவேன். இன்னமும் எழுதுங்கள்.
more scientific analysis is needed... when we analyse the concept of state.. jus a constructive critisism
Miga arumayana prayosanamana pathivu. Thodrnthu eluthungal.