இன்றைய உலகில் வாழ்கின்ற அனைவரிடமே ஏனையவர்களிடத்தே கூறமுடியாத அல்லது கூறவிரும்பாத பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றது . ஏன் நீங்கள் கூட அவ்வாறான பல விடயங்களை உங்கள் மனதில் போட்டு புதைத்துள்ளிர்கள் தானே?
அவ்வாறான ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் விடயங்களை வெளியே கொண்டுவருவதற்காக சிக்மன் ப்றோயிட் என்ற உளவியரலால் முன்வைக்கப்பட்டதே உளப்பகுப்பாய்வு கொள்கை ஆகும்.
உளப்பகுப்பாய்வு என்பது மனிதனின் ஆழ்மனதிலே பதியப்பட்ட விடயங்கள் மனித நடைத்தையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பரிசீலிக்கும் முறையாகும். இதன் படி இம்முறையானது மனித நடத்தையிலும் ஆளுமையிலும் மறைவான மூல இடங்களை ஆராய்கின்றது.
இந்த உளப்பகுப்பாய்வின் முலம் மனிதனின் ஆழ்மனதில் உள்ள விடயங்களை கண்டு பிடிக்கவும்,உளவியல் ரீதியாக பதிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வரவும் முடியும்.
கூடுதலாக எம்முடைய ஆழ்மனத்தில் நிறைவேறாத பாலியல் ஆசைகள்,பயம்,அறிவுபூர்வமற்ற விருப்புகள்,வன்முறை,ஒழுங்கீனமான நடத்தை தூண்டல்கள்,சுயநல தேவைகள்,வெட்கப்படக்கூடிய அனுபவங்கள் போன்றவை காணப்படுகின்றன. இவ்வாறான உணர்ச்சிகளை இலங்கையர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை.
இதற்கு காரணம் கலாசாரம், பண்பாடு, மதவிடயங்கள், காரணமாக இலங்கையர்கள் ஓர் வரையறைக்கு உட்பட்டு வாழ்கின்றனர்,மனநோயினை ஒரு மனநோய் தான் என்று ஏற்றுக்கொள்ள இலங்கை சமூகத்தினர் முன்வராமை,
உளவியலாளர்கள் தொடர்பான நம்பிக்கையின்மை,மருந்துகள் மூலமே நோய்களை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கம்.
உதாரணமாக துஷ்பிரயோகத்துக்கு உட்பட்ட சிறுவனோ சிறுமியோ தான் அதன் காரணமாக மன உளைச்சலுக்கு உட்படுகின்றோம் என்பதை சமூகம் அறிவதனை விரும்புவதில்லை.மேலும் அவர்களுடைய பெற்றோர்கள் அதனை வெளியே கூற அனுமதிப்பதும்மில்லை.இதற்கு காரணம் இலங்கை சமுகத்தவர்களிடையே காணப்படும் கலாசார பண்பாட்டு அம்சங்களாகும்.அத்தோடு பாதிக்கப்பட்டவரின் குடும்ப சூழ்நிலை,சுழல், மற்றும் தாம் தவறானவர்கள் என்று சமுகத்தில் முத்திரை குத்தப்படுவோம் என்ற பயம் காரணமாக தம்மை வெளிபடுத்த விரும்புவதில்லை.
இதன் காரணமாக குறித்த சிறுவனோ சிறுமியோ மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர்.இவ்வாறு தம்மை வெளிபடுத்த பல தடைகள் இருப்பதால் இவ் உளப்பகுபாய்வு என்ற சிகிச்சை முறையானது இலங்கை சமுகத்துக்கு பொருந்துவதில்லை.
அடுத்து இலங்கை சமுகத்தவர்களிடையே மன நோய் தொடர்பாக தெளிவு மற்றும் அறிவு காணப்படுவதில்லை.மேலும் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் தமக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதி பேய்ஆட்டுதல்,மந்திருத்தல்,தாயம் கட்டுதல் போன்ற மூடநம்பிக்கைகளை நாடுகின்றனரே ஒழிய அதற்கேற்ற உளவியல் சிகிச்சை முறைகளை நாடுவதில்லை.
மேலும் இலங்கை சமுகத்தை பொறுத்தவரை பாலியல் என்பது அருவருக்கதக்கதவவும் அது பற்றி வெளிப்படையான கருத்து என்பது காணப்படுவதில்லை. உதாரணமாக இலங்கை சமூகத்தினரிடையே ஓரின சேர்க்கையில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இருக்கின்ற போதும் அவர்கள் தமது ஆசைகளை மனதில் அடக்கி கொண்டு சாதாரண திருமண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.இதனால் இவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர்.
அதுபோன்று இலங்கை மக்களின் குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு முரண்பாடுகளும் பிரச்சனைகளும் நிலவுகின்றன.எனினும் அதிகமாக பெண்கள் அதனை வெளிபடுத்த விரும்புவதில்லை.அவர்கள் தமது கணவர்மார்களால் ஏற்படும் கசப்பான விடயங்களை வெளியே கூறாமல் தமது மனதில் போட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் உள நோய்க்கு உட்பட்ட ஒருவரை எமது சமூகம் நோக்கும் பார்வை சம்பந்தபட்டவரையும் அவரது குடும்பத்தையும் பாதிப்பதாக உள்ளது.இங்கு உள நோய்க்கு உட்பட்டவர் மட்டுமல்லாது அவரது குடும்பமும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றது.அத்தோடு சமூகத்தால் தாம் கேலி செய்யப்படுவோம் என்ற பயத்தின் காரணத்தாலே பெரும்பாலும் அவர்கள் தம்மை வெளிபடுத்த விரும்புவதில்லை.
மேலத்தேய நாடுகளை பொறுத்தவரை இம் சிகிச்சை முறையானது பிரபலமாக உள்ளது.காரணம் அவர்களின் சமூக கட்டமைப்பு. ஆனால் வளர்முக நாடுகளை பொறுத்த வரை அவ்வாறல்ல. எனவே எமது சமூகட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவரும் பட்சத்தில் இவ்வாறான சிகிச்சை முறைகள் மூலம் உளநோய்க்கு உட்பட்டவரை இலகுவாக குணப்படுத்த முடியும்.
Hong Kong’s Sham Elections Expose Beijing’s Tightening Grip
-
Click to expand Image A banner promoting the Legislative Council General
Election in Hong Kong, December 3, 2025. © 2025 Chan Long Hei/AP Photo
Hong Kong ...
1 day ago













0 comments:
Post a Comment