Tuesday, October 19, 2010

மனித உரிமையின் வளர்ச்சி -2

4 comments
மனித உரிமைகள் பற்றிய வரலாற்று ரீதியான போக்கை இந்த பதிவில் பர்த்துவருகின்றோம். அந்த வகையில் கடந்த பதிவில் மனித உரிமைகளின் ஆரம்பநிலை  ஆகிய மக்னா காட்டா உடன்படிக்கை பற்றி பார்த்தோம்.

மக்னா காட்டா அமுலாக்கப்பட்ட 1215 - 1689 வரை மனித உரிமைகளை பாதுகாத்து சிறந்த ஒரு நிர்வாகம் நடைபெற்றது என்று கூறமுடியாது. ஏனேனில் இக் காலப்பகுதிலேயே 14 ம் ஹென்றி மன்னன் பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து கொன்று குவித்தான். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் இக் காலப்பகுதியில் நடைபெற்றது.

இந்தவகையில் 1611 இல் நீதவான் குக் அவர்கள் " ஒரு மன்னனுக்கு மரபு வழி வந்த உரிமைகள் எதுவும் இல்லை. சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டே  மன்னன் செயற்படவேண்டும்". என்று பிரகடனம் செய்தார். 1689 ம் பிரத்தானிய உரிமை பிரகடனம் இந்தவகையிலேயே வெளியிடபட்டது. இதன் காரணமாக மன்னன் சட்டத்திற்கு உட்பட்டே தனது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது.


அமெரிக்க சுகந்திர போராட்டத்திற்கு, மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகளும் சுகந்திரங்களும் என்ற எண்ணக்கருவே வித்திட்டது. இந்தவகையில் ஐக்கிய அமெரிக்க என்ற புதிய அரசாங்கத்தை நிறுவி, புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி  ஜோர்ச் வோசிங்டன் கீழ் அமெரிக்க தீர்மானங்கள் என்ற பெயரில் 1776 ஜூன் 12  வேர்ஜினியாவில் வெளியிடப்பட்ட பிரகடனம் மனித உரிமைகள் தொடர்பான அபிவிருத்தியில் முக்கியமானதொரு மையில் கல்லாகும்



இதன்  முதலாவது அத்தியாயத்தில், ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே சுகந்திரமானவன்.அதனை பிரிக்க மற்றும் மறுக்கவும் முடியாது. மனிதன் சமுதாயத்துள்  புகுந்தவுடனையே அவனுக்கு உரிமை கிடைகின்றது.எந்த சந்தர்பத்திலும் அவனது உரிமைகளை பறிக்க முடியாது. குறைக்க முடியாது. அவையாவன ,

        வாழ்க்கையையும் சுகந்திரத்தையும் அனுபவிக்கும் உரிமை.
        ஆதனத்தை உரிமைகொள்ளும் உரிமை.
        சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிமை.

இரண்டாவது அத்தியாயத்தில்,
 அரசுக்கிருக்கும் அனைத்து அதிகாரமும் மக்களிடம் மிருந்தே கிடைக்க பெறுகின்றது.நீதவான்கள் மக்களின் பாதுகாவலர்கள். அவர்கள் எப்போதும் மக்களுக்கு சேவை  செய்ய கட்டுப்பட்டவர்கள்.

மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு.தகாத நிர்வாக முறைமையின் கீழ் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்க, அவசியமான நடவடிக்கைகள் அரசினால் மேட்கொள்ளபடவேண்டும்.

இந்தவகையில் மனிதஉரிமைகள் மட்டுமன்றி அரசின் பொறுப்பும் செயற்பாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் எடுத்துகட்டப்படுகின்றது.
மீண்டும் சந்திப்போம்.........

4 comments:

Post a Comment