
இன்றைய உலகில் வாழ்கின்ற அனைவரிடமே ஏனையவர்களிடத்தே கூறமுடியாத அல்லது கூறவிரும்பாத பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றது . ஏன் நீங்கள் கூட அவ்வாறான பல விடயங்களை உங்கள் மனதில் போட்டு புதைத்துள்ளிர்கள் தானே?
அவ்வாறான ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் விடயங்களை வெளியே கொண்டுவருவதற்காக சிக்மன் ப்றோயிட் என்ற உளவியரலால் முன்வைக்கப்பட்டதே உளப்பகுப்பாய்வு கொள்கை ஆகும்.
உளப்பகுப்பாய்வு என்பது மனிதனின் ஆழ்மனதிலே பதியப்பட்ட விடயங்கள் மனித நடைத்தையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை...